இது இனியனின் பதிவு. பள்ளியில் மூலிகை குறித்த பொருட்களை சேகரிக்க சொன்ன போது பல்வேறு மூலிகைகளை மடிப்பு நுண்ணோக்கியில் பார்ப்பது என்ற முடிவின் ஒரு பகுதி. இது ஞாயிறு அன்று பதிவு செய்தது உடனே பதிவேற்றம் என்னால் செய்யமுடியவில்லை.
இஞ்சியின் சிறு பகுதியை ஒரு பிளேடால் வெட்டி எடுத்துக் கொண்டான். அந்த பகுதியிலிருந்து மிக மெலிதாக குறுக்கே வெட்டி எடுத்தான். அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பார்க்கும் போது அசந்துவிட்டான். வைரம் போல் இருப்பதாக கூறினான். ஆம் அதுவும் உண்மைதான். வைரத்தை கொட்டிவைத்தார் போல மின்னியது. தண்ணீர் ஊடே வெளிச்சம் ஊடுருவியபோது நிறப்பிரிகை ஏற்பட்டு வண்ணங்கள் தெரிந்தன. பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது. வண்ணங்கள் பிரிந்ததை இந்த படங்களில் பார்க்கலாம்.
@Eden: Is that dry ginger by any chance. Beautiful 🙂 Very crisp structure of cells.
cheers
manu
காய்ந்த இஞ்சியை வைத்துப் பார்க்க வேண்டும். அடுத்த பதிவில் அது எப்படி இருக்கும் என்பதை பதிவு செய்கிறேன். தங்கள் தரும் உற்சாகத்திற்கு நன்றி.