கல்வராயன் மலைகிராம மாணவர்களுடன் ஒரு நாள்

Applause IconDec 13, 2018 • 10:34 PM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையில் உள்ள மலைவாழ் குழந்தைகளுக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்குவதற்கு என முடிவு செய்திருந்தேன். அதன் அடிப்படையில் அக்ஷதாவின் உதவியுடன் 10.12.2018 அன்று நடத்துவதது என்ற ஏற்பாட்டுடன் சென்றேன். உண்மையில் மிகச் சிறந்த அனுபவம். நான் உள்ளே நுழைந்ததும், அங்கிருந்த மாணவர்கள் எனக்க வணக்கம் தெரிவித்தனர். அத்தோடு காலை சாப்பாடு சாப்பிட்டீர்களா என்று கேட்டனர். இது போன்ற பல்வேறு அன்பான வார்த்தைகளை தொடர்ந்து பார்க்கும் மாணவர்கள் அனைவரும் கேட்டது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நான் அங்கே அவர்களுக்கு புதியவன் போல தெரியவில்லை. மிகவும் நெருக்கமாக பழகினார்கள்.
அப்பள்ளியில் 230 மாணவர்கள் படிக்கிறார்கள். அதில் 190க்கும் மேற்பட்டோர் அங்கேயே விடுதியில் தங்கி படிக்கின்றனர். அவர்கள் அனைவரும் கல்வராயன் மலையையில் இருக்கும் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களின் பெற்றோர் பெரும் பாலும் மரம் வெட்டும் தொழிலையும், விவசாய கூலிகளாகவும் இருக்கின்றனர். பள்ளியில் இருக்கும் பெரும்மான்மையான மாணவர்களுக்கு ஒரு பெற்றோர் உள்ளவர்களாகவோ, அல்லது பெற்றோரே இல்லாதவர்களாகவோ இருக்கின்றனர். இவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கி பயிற்சி கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf