ஞாயிறு அன்று இனியனுக்கு விடுமுறை பொதுவாக விடுமுறையில் 15 நிமிடங்கள் மடிப்பு நுண்ணோக்கி பதிவு செய்வது என்ற அடிப்படையில் அவன் செயல் பட்டு வருகிறான். சில சமயங்களில் இது அவனால் சாத்திய படுத்தமுடியவில்லை. இப்போது தேர்வு நேரம் என்பதால் அவனால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. ஆனாலும் இந்த ஞாயிறு அன்று கூத்தியார் குண்டு கண்மாயில் தண்ணீர் எடுத்துவந்து மாதிரிகளை பதிவு செய்தான் அதுவும் காலையில்தான் பதிவு செய்தான். மதியம் அவன் நண்பர்களுடன் படிக்கச் சென்றுவிட்டான்.அவன் பதிவு செய்தவை உங்கள் பார்வைக்கு.