இது முதின்ஸ் பதிவு செய்தது. காலையில் பள்ளிக்கு செல்லும் முன் அவள் பரபரப்பாய் பதிவு செய்தது. ஆச்சரியமான விஷயங்களை பார்க்க முடிந்தது. முகத்தில் உள்ள முடி, மிக கூர்மையான வலைந்த கால்கள். கரும்பு போல கனுக்குனுவான கால்கள். உருஞ்சப்பட்ட ரத்தம் ஓட்டம் முழுமையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனாள். என்னிடமும் காட்டினாள். பேன் உயிருடன் இருந்தது. அதனை விடியோவும் செய்யச் சொன்னாள். 5 நிமிடம் விடியோ உள்ளது. பதிவு செய்கிறேன்.