2மாத திட்டமிடல் சிறப்பாக முடிந்தது. இரண்டு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி.
கண்காட்சியில் வைக்கப்பட்ட பேனர். முதல் நாள் கண்காட்சியில் 18 பள்ளிகள் 1 ஆசிரியர் பயிற்சிப் பள்ளியிலிருந்து 900 பேர் பார்வையிட்டனர்.
ரமேஷ் குமார் ஆங்கிலத்துறை தலைவர் ஈடன் கல்வியியல் கருத்துக்கூடம். மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்த படங்களை கண்காட்சிக்க தயார் படுத்துகிறார்.
ஈடன் குழந்தைகளான முதின்ஸ், சிவலட்சுமி, அனுஷ்யா, வைஸ்னவி, சிவரஞ்சனி கண்காட்சிக்கு வருகிறவர்களை பதிவு செய்யும் வேலையை செய்தனர்.
மதுரை கீழவாசல் ஆர்சி பள்ளியி ஆசிரியர்கள் தங்களை பதிவு செய்துகொள்கிறார்கள்.
கண்காட்சியை விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் இயங்கி வரும் புனித மேரி பள்ளி மாணவர்கள் பார்வையிடுகின்றனர். மேலும் தங்கள் குறிப்பேட்டில் குறிப்புகளை எடுத்துக் கொள்கின்றனர்.
துவக்க நிகழ்ச்சியில் பூச்சியில் நிபுணர் முனைவர் தினகரன். முனைவர் பொன்குமார், இந்திரா டீச்சர், முனைவர் சங்கர், பாண்டியராஜன்(நான்) முனைவர் கிருஷ்ணசாமி
கண்காட்சியை பார்த்து குறிப்பெடுக்கும் மாணவர்கள்.
மடிப்பு நுண்ணோக்கியை கையாலுவது பற்றிய பயிற்சி மற்றும் சிலேடு தயாரிப்புக்கான பயிற்சியை சிவரஞ்சனி, அனுஷியா, வீர நரேஷ், முதின்ஸ் மற்றும் சிவா ஆகியோர் செய்தனர். இதனை 19 ஈடன் அறிவியல் கழக குழந்தைகள் ஒருங்கிணைப்பு செய்தனர். முனைவர் தினகரன் முனைவர் கிருஷ்ணசாமி முனைவர் உஷா முனைவர் சங்கர் பேரா. ராஜமாணிக்கம் ஆகியோர் பங்கேற்று குழந்தைகளுக்கு மடிப்பு நுண்ணோக்கி குறித்த விளக்கம் மற்றும் செயல்பாடுகளை குறித்து விளக்கம் அளித்தனர் கள்ளர் சீரமைப்பு துறை இணை இயக்குனர் முனைவர் பொன் குமார் அவர்கள் மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மை குறித்து அற்புதமான துவக்க உரை நிகழ்த்தினார். கண்காட்சியில் ஈடன் அறிவியல் கழக குழந்தைகள் கடந்த டிசம்பர்2015 முதல் 2016 அக்டோபர் வரை மடிப்பு நுண்ணோக்கியில் எடுத்தப் படங்கள் சுமார் 100 படங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. அதை தொடர்ந்து முனைவர் மனுப் பிரகாஷின் 9 நிமிட வீடியோ, ஈடன் குழந்தைகள் மடிப்பு நுண்ணோக்கியில் எடுத்த 5நிமிட வீடியோ ஆகியவை ஒளிபரப்பப்பட்டது. அதற்கான விளக்கத்தை முனைவர் தினகரன் மற்றும் ஆக்கம் சங்கர் ஆகியோர் வழங்கினர்.
மாணவர்கள் மடிப்பு நுண்ணோக்கியில் தாங்கள் பார்ப்பதை வரைபடமாக்கும் புரொஜக்சன் பூத் 3 அமைக்கப்பட்டிருந்தது. அதில் மாணவர்கள் ஆர்வத்துடன் உருவங்களை பார்த்து படங்களை வரைந்தனர். அ தன் மூலம் 59 வரை படங்கள் மாணவர்களால் வரையப்பட்டது. அதனை சந்தோசஸ் குமார்(ஈடன் மாணவர்) ஒருங்கிணைப்பு செய்தார்.
கண்காட்சியை பார்வையிடுவதற்காக மாணவ மாணவிகள் நெடு நேரம் காக்க நேர்ந்துவிட்டது.
இரண்டாம் நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. பயி்ற்சியில் 8 (தமிழ்நாடு அ
றிவியல் இயக்க மாவட்டங்கள் 15 பள்ளிகள் 3 பாலர் இல்லங்கள் என 73 பேர்
பங்கேற்றனர். பயிற்சி இரண்டு கட்டமாக நடைபெற்றது. பயிற்சியை ஈடன் குழந்தைகளுடன் இணைந்து திரு. பாண்டியராஜன் முனைவர் கிருஷ்ண சாமி முனைவர் உஷா திருமிகு இந்திரா ஆகியோர் கொடுத்தனர். முனைவர் சங்கர் யோகேஷ் கார்த்திக் ஆகியோர் பயிற்சிக்கு தேவையான உதவிகளை செய்தனர். இன்று 32 மைக்ராஸ்கோப்பு வழங்கப்பட்டு அதனை போனில் பதிவு செய்ய, பதிவு செய்யப்பட்ட படங்களை போல்ட ஸ்கோப் டாட் காமில் பதிவு செய்ய பயிற்சி வழங்கப்பட்டது. சிலேடு தயாரிக்கவும் பயிற்சி வழங்கப்பட்டது. இது முழுக்க முழுக்க ஈடன் சைன்ஸ் கிளப் மாணவர்களே பயிற்சியும், கண்காட்சியையும் ஒருங்கிணைப்புச் செய்தனர். நன்றி. அன்புடன் மொ.பாண்டியராஜன். ஈடன் கல்வியியல் கருத்துக் கூடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போல்ட் ஸ்கோப் ஒருங்கிணைப்பாளர்.
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!