19.11.2016 சனிக்கிழமை அன்று சென்னை கணிதவியல் நிறுவனத்தில் மடிப்பு
View in Media Gallery
நுண்ணோக்கி பயிற்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை கணிதவியல் நிறுவனத்துடன் இணைந்து டாக்டர். ராமானுஜம். டாக்டர். கிருஷ்ணசாமி மற்றும் கணிதவியல் நிறுவனத்தில் பணி புரியும் பேராசிரியர்கள். மாணவர்கள் செய்திருந்தனர்.
View in Media Gallery
சென்னையைச்சுற்றி உள்ள 19 பள்ளிகளிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்றனர். 17 மாவட்டங்களிலிருந்து தமிழ்நாடு அறிவியல் இயக்க தொண்டர்கள் மற்றும் 10 கணிதவியல் நிறுவன மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். காலை10.30 மணிக்கு பதிவு ஆரம்பிக்கப்பட்டது. முன்னதாக மடிப்பு நுண்ணோக்கி குறித்த விளக்கமும். பயிற்சியின் நோக்கம் குறித்தும் முனைவர் எஸ். கிருஷ்ணசாமி விளக்கினார். அதை தொடர்ந்து முனைவர். ஆர். ராமா னுஜம் கணிதவியல் நிறுவனத்தை குறித்தும் மக்களுக்க
View in Media Gallery
பணி செய்ய மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் விளக்கினார். இந் நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்தலைவர் பேரா. மோகனா துவக்கி வைத்தார். தமிழ்நாடு
அறிவியல் இயக்கத்தின் அறிவியல் கல்வி பிரச்சார உபக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு. கவனவன் வாழ்த்துரை வழங்கினார். பயிற்சி வழங்குவதற்கான மதுரையிலிருந்து பாண்டியராஜ ன்(நான்) இந்திரா டீச்சர், முதின்ஸ், இனியன், வீரநரேஷ், பேரா. ராஜமாணிக்கம், சென்றிருந்தோம். அங்கே டாக்டர்.எஸ்.கே., டாக்டர் உஷா, மற்றும் ஐந்து ஆராய்ச்சி மாணவர்கள் ( இவர்களுக்கு எஸ்.கே. அவர்கள் 18ம் தேதி ஆராய்ச்சி மாணவர்களுக்கு முன்பே பயிற்சி வழங்கியிருந்தார்.) பங்கேற்றனர். ஒருவருக்கு நான்கு பேர் என்ற விதத்தில் வந்திருந்தவர்களை பிரித்து பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியில்
View in Media Gallery
மடிப்பு நுண்ணோக்கி செய்வதற்கான பயிற்சி சிலேடு தயாரிப்பதற்கான பயிற்சி நுண்ணோக்கியில் பார்ப்பதற்கான பயிற்சி
View in Media Gallery
மொபைலில் பதிவு செய்வதற்கான பயிற்சி மைக்ரோகாஸ்மோஸ்ல் பதிவுஏற்றுவதற்கான பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன. டாக்டர் மனுப்பிரகாஷ்ன் 9நிமிட வீடியோ, ஈடன் பதிவு செய்யத 5நிமிட வீடியோ, மற்றும் பதிவு செய்த படங்கள் ஆகியவை திரையிடப்பட்டன.
View in Media Gallery
நிழ்ச்சி முழுவதையும் 18 நியூஸ் செய்தி சேனல் பதிவு செய்யப்பட்டது. அன்புடன் மொ. பாண்டியராஜன் ஈடன் சைன்ஸ் கிளப் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!