தருமபுரியில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி

Applause IconApr 24, 2018 • 7:02 PM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
22.04.2018 அன்று தருமபுரி மாவட்டம் சோலக்கொட்டாயில் உள்ள டாக்டர் ராமதாஸ் மேல்நிலைப் பள்ளியில் நண்பர் தமிழரசன் ஏற்பாட்டில் மடிப்பு நுண்ணோக்கிப்பயிற்சி நடைபெற்றது. நானும் இனியனும் பயிற்சி வழங்கினோம். அற்புதமான பள்ளி. அப்பள்ளி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும் கல் உடைக்கும் தொழில் செய்து வருகின்றனர். ஒரு நாளைக்கு 200 ரூபாயிலிருந்து 300 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கும் பெற்றோர்கள். பெரும்பான்மையானவர்கள் கூலி விவசாயத் தொழிலுக்கு செல்கின்றனர். 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் பள்ளியில் உரைவிட வசதியும் உண்டு. இலவசஉரைவிட வசதி. மற்றும் இலவசக் கல்வி கொடுத்து வருகிறார்கள். ஆசிரியர்கள் பெரும்பாலும் தொண்டு உள்ளத்தோடு பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கான சம்பளம் என்பது மிக குறைவானதாகவே பெற்றுக்கொண்டு ஆர்வத்துடன் கற்றுக்கொடுத்து வருகின்றனர். சில ஆசிரியர்கள் ஓய்வு பெற்றப்பினர் வந்து பணி செய்து வருகின்றனர். காலை சாப்படு என்பது சோல சோறு. மதியம் சாப்பாடு, இரவு கூல் போன்ற சாப்பாடே மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 50 முதல் 100 கிலோமீட்டர் தூரத்திலிருந்து மலையிலிருந்து கீழே இறங்கி வந்து இந்த பள்ளியில் தங்கி பயிலுகின்றனர். அவர்களுக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி வழங்கப்பட்டது. சுமார் 5 பள்ளிகளிலிருந்து 93 மாணவர்கள் பங்கேற்றனர். நாங்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு மடிப்பு நுண்ணோக்கி என்றவகையில் பிரித்துக் கொடுத்து பயிற்சியும் வழங்கினோம். ஈடன் சைன்ஸ் கிளப் அவர்களுக்கு பயிற்சி கொடுத்ததை பெருமையாக கருதுகிறது. மலைகிராம மக்களுக்க கொண்டு செல்ல வேண்டும் என்ற நினைவு இன்று தொடங்கியுள்ளது. பயிற்சியின் போது மாணவர்களுக்கு பல்வேறு வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. ஓடை பூச்சிகள் குறித்து பதிவு செய்யலாம். மரங்களில் வாழும் சிற்றுயிர்கள் குறித்து பதிவு செய்யலாம். தாங்கள் பார்க்கும் உயிரினம் குறித்த பதிவினை பேப்பர்களில் வரைபடமாக வரைந்து(பயிற்சி வழங்கப்பட்டது) தொகுத்து அதனை பள்ளியின் சார்பில் வெளியிடலாம். மைக்ரோகாஸ்மோஸ் பகுதியில் பதிவிடவும் ஆசிரியர்களுக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இல்லாத நேரத்திலும் கூட மாணவர்கள் படம் வரைந்து பாதுகாக்கலாம் என்றும் வழிகாட்டப்பட்டுள்ளது. 3 மாதங்களுக்கு ஒருமுறை மீள்பார்வை செய்யவும் வழிகாட்டப்பட்டுள்ளது.
வு
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf