Oneday Foldscope Biowalk @ Suruli Falls TamilNadu

Applause IconAug 12, 2018 • 9:34 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கி களப் பயணம் ஈடன் சைன்ஸ் கிளப் உறுப்பினர்கள் 24 பேர் கொண்ட குழு தேனிமாவட்டம் சுருளி அருவி உள்ள காட்டுப் பகுதிக்கு செல்வது என திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் 11.08.2018 அன்று காலை 7 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டுச் சென்றோம். அற்புதமான களப்பயணமாக இருந்தது. களப்பயணத்தில் பல தடங்களும் இருந்ததை பார்க்க முடிந்தது. வனத்திற்குள் நாம் எளிமையாக செல்ல முடியவில்லை. முதலில் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமாம். நாங்கள் 25 பேர் சென்றோம். ம்கும் உள்ளே அனுமதிக்கவே இல்லை. மக்கள் செல்லும் வழியில் சென்று வருவதற்கு மட்டும் தான் அனுமதி. உள்ளே சென்று மாதிரி சேகரிக்க அனுமதி வழங்கவில்லை. அதனால் முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை. ஆனாலும் பதிவ செய்தார்கள் குழந்தைகள். ஆனால் இன்னொருவிஷயம் சிறப்பாக அ மைந்தது. அதவாது நாங்கள் சென்று நாள் ஆடி அம்மாவாசையாம். அப்படியெல்லாம் அறிவியலுக்கு தெரியாது இல்லையா. அதனால் நாங்கள் திட்டமிட்ட படி சுருளிக்கு சென்றுவிட்டோம். அங்கே ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு அருவியில் குளிப்பதற்கு வந்திருந்தனர். மேலும் அருவிக்கு இடது புறத்தில் கைலாச குகை என்ற ஒன்று இருப்பதாகவும் அதற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு சென்று வந்து கொண்டிருந்தனர். எங்களுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர் திரு பாண்டியன் அவர்கள் வழிகாட்டியாகவும் உதவியாகவும் வந்தார். அவருடை வழிகாட்டலின் படி அங்கே சென்றோம். அங்கே 1000க்கும் மேற்பட்ட யாத்திரிகள் வந்து கொண்டும் போய் கொண்டும் இருந்தனர். அங்கே கிடைத்த நுண்பொருட்களை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து அங்கே வந்த யாத்திரிகர்களுக்கு காட்டி ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். யாத்திரியர்கள் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்க காட்டிய மாதிரிகளின் பதிவுதான் இது.
களப் பயணத்தின் போது படம் வரைவது என்ற அடிப்படையில் ஏற்பாட்டோடு சென்றோம். ஆனால் படம் வரைதல் இயலவில்லை. அதிகப்படியான மாதிரிகளை சேகரிக்க முடிந்தது. ஆனால் அங்கேயே பதிவு செய்ய முடியவில்லை. ஒரு நாள் களப் பயணம் மாதிரிகளை முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை. அதனால் இரண்டுநாள் களப்பயணம் மட்டுமே பதிவுகளை உறுதிப்படுத்தும் என்பது அனுபவமாக இருந்தது.
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf