சாப்பிடும் எறும்பு

Applause IconOct 14, 2018 • 6:03 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
IISF2018 Science Village ல் இரண்டு 200 மாணவர்களுக்கு காலை 10 மணிக்கு பயிற்சி தொடங்கி 2மணிவரை சென்றது. டாக்டர் மனு மற்றும் மடிப்பு நுண்ணோக்கி டீம் எல்லோரும் 2 மணிக்கு பிறகுதான் மதிய உணவிற்கு சென்றோம். எல்லோருக்கும் கடுமையான பசி. சாப்பிட்டு வரும் போது சுமார் 3.30 ஆகிவிட்டது. வழியில் ஒரு ஐஸ்கிரீம் டப்பா கிடந்தது. அதில் சில எறும்புகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தன. நானும் என்னுடன் தீபக் மோடியும் வந்தார். வழியில் நான் அந்த எறும்புகளை பார்த்து அதனை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்யலாம் என்று முடிவு செய்து எடுத்தேன். எனக்கு தீபக் உதவி செய்தார். அதனை மடிப்பு நுண்ணோக்கியில் பதிவு செய்தேன். எறும்பு மதிய உணவு சாப்பிட்டதை பார்க்க முடிந்தது. அது உணவு சாப்பிடும் அழகு அற்புதம்.
View in Media Gallery

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf