ஐஐஎஸ்எப்2018 தொடக்க நிகழ்ச்சியின் பின்னால் நாங்கள் அமர்ந்திருந்தோம். சுமார் 1 மணிநேரத்திற்கு பிறகும் கூட நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவில்லை. Manu Prakash, Deepak Modi , Rahi, Rajangam, Kanakaraj மற்றும் நான் ஆகியோர் ஆடிட்டோரியத்தை விட்டு வெளியே வந்துவிட்டோம். ஒரு டீ சாப்பிட்டுவிட்டு, புதிய ட்ரிக்குகளை கற்றுக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் மனுவுடன் மாதிரிகளை சேகரித்துக் கொண்டோம். டீ சாப்பிடும் இடம் எங்களுக்கு லேப் ஆனது. பல ட்ரிக்குகளை மனு கற்றுக் கொடுத்தார். 1. மாதிரிகளை சேகரிக்கும் போது உயிருடன் சேகரிக்க பிளாஸ்டிக் பவுச்களை பயன்படுத்தி பிடிக்கலாம். மற்றொன்று பிளாஸ்டிக் டியூப்புகளை பயன்படுத்தியும் பிடிக்கலாம். 2. அப்படி உயிருடன் பிடிக்கப்பட்ட பூச்சிகளில் விஷம் நிறைந்த பூச்சியாக இருந்தால் அதனை அந்த பிளாஸ்டிக் பவுச்சில் ஒரு மூலைக்கு கொண்டு வந்து அதனை உயிருடன் மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பார்க்கலாம், பதிவு செய்யலாம். 3. செடியில் வரும் பால்களை மடிப்பு நுண்ணோக்கியில் வைத்துப் பதிவு செய்யும் போது அந்த பாலின் தன்மையை அறிந்து கொள்ளலாம். 4. லைட் வெளிச்சத்தில் வரும் பூச்சிகளை கைகளை நீட்டினால் நம் கைகளில் பூச்சிகள் ஒட்டிக் கொள்ளும். எளிதாக மாதிரிகளை சேகரித்துக் கொள்ளலாம். 5. உயிருடன் பிடிக்கப்பட்ட பூக்களை ஒரு டிஷுப் பேப்பரில் உயிருடன் வைத்து அதனை சிலேடில் ஒட்டி அதனை இயக்கத்தை உயிருடன் பார்க்கலாம். 6. சில பூச்சிகளை நமது தலை முடியைக் கொண்டு முடிச்சுப் போட்டு அதனை அப்படியே உயிருடன் சிலேட்டில் கட்டி மடிப்பு நுண்ணோக்கியில் வைத்து பதிவு செய்யலாம். இது போன்ற ட்ரிக்குகளை கற்றுக்கொண்டிருந்த போதே இந்த எறும்பின் காலை பதிவு செய்தேன்.
View in Media Gallery
Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!