பழங்குடி மற்றும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு பயிற்சி

Applause IconOct 25, 2018 • 11:06 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
மதுரையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் பயணம் செய்தால் பேரையூர். பேரையூரிலிருந்து சுமார் 18 கிலோ மீட்டர் மலைப் பாதையில் பயணம் செய்தால் சுந்தரலிங்க புரம் 1950களில் பழங்குடி மற்றும ஆதிதிராவிட மாணவர்கள் பயிலுவதற்காக கட்டப்பட்ட பள்ளிக்கூடம் தற்போதும் 300 குழந்தைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு வசதி இல்லாத ரோடு, மற்றும் அரசு பேருந்து இல்லாத மலை அடிவாரத்தில் உள்ள பள்ளி. அங்கே உள்ள மக்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள். அனைவரும் விவசாயம் மற்றும் செங்கள் சூளையில் வேலை பார்ப்பவர்கள். பொதுவாக மக்கள் அந்த ஊருக்கு சுமார் 5 கிலோமீட்டர் நடந்து தான் செல்வார்கள். எனது முகநூல் பதிவினை தொடர்ச்சியாக பார்த்து வந்த அப் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் பாலச்சந்தர், மடிப்பு நுண்ணோக்கியின் பதிவுகளில் ஈர்க்கப்பட்டு அதனை பள்ளியில் செயல்படுத்த ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார். சுமார் 6 மாதகாலம் அவர் தொடர்ச்சியாக தொடர்வு கொண்டதால் அப்பள்ளிக்கு மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி கொடுக்க திட்டமிட்டு 24.10.2016 அன்று அப்பள்ளிக்குச் சென்று பயிற்சி வழங்கினேன். 8 மற்றும் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சுமார் 30 பேர் இந்த பயிற்சியில் பங்கேற்றனர். அவர்கள் தயாரித்த மடிப்பு நுண்ணோக்கியில் வைக்கப்பட்ட மாதிரிகளை 300 மாணவர்கள் கண்டு களித்தனர். அற்புதமான நிகழ்வு. மாணவர்கள் மாதிரிகளை சேகரிக்க தோட்டத்திற்குள் அழைத்துச் சென்ற போது அப் பகுதி மக்களின் வரவேற்பு என்னை மிகவும் கவர்ந்து விட்டது. மடிப்பு நுண்ணோக்கியைப் பயன்படுத்திய ஆசிரியர்கள் வியந்து போனார்கள். இது நிச்சயம் எங்கள் மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் என்று கூறினர்.
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf