திடீர் விஜயம்

Applause IconDec 09, 2018 • 10:02 AM UTC
Location IconUnknown Location
Applause Icon140x Magnification
Applause IconUnknown
User Profile

I am a Primary School Teacher

1026posts
130comments
62locations
SINGLE IMAGE
View in Media Gallery
நான் பள்ளியில் இருந்தேன். மழை தூறிக்கொண்டிருந்தது. வகுப்புக்குள் மாணவர்கள் கணிதம் கற்றலில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர். நான் பின்னங்களை பல்வேறு பொருட்களை வைத்துக்கொண்டு கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தேன். வாசலில் என்னை தேடி சிலர் வந்திருப்பதாக கூறினார்கள். எட்டிப் பார்த்தேன். மூன்று ஆசிரியர்கள், இரண்டு மாணவர்கள் வந்திருந்தனர். ஆசிரியர்கள் எனிடம் கோவையில் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி பெற்றவர்கள். அவர்களுடைய பள்ளி பெரியகுளத்தில் உள்ளது. அது மதுரையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வந்திருந்தனர். மடிப்பு நுண்ணோக்கியை கொண்டு அவர்கள் செய்ய இருக்கும் அரசு அறிவித்துள்ள இன்ஸ்பியர் அவார்ட்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை தெரிவித்தனர். தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுடன்தான் அந்த ஆசிரியர்கள் வந்திருந்தனர். மாணவிகளுக்கு இன்னும் சிறப்பாக செய்வதற்கான பயிற்சி வழங்க வேண்டும் என்று கேட்டுவந்திருந்தனர். அவர்களுடைய அந்த உந்துதல் என்னை வெகுவாக கவர்ந்தது. அது மட்டுமல்ல மடிப்பு நுண்ணோக்கியின் பயன் குறித்த அவர்களுடைய நம்பிகையை அது காட்டியது. அவர்களுக்கு சுமார் அறைநாள் அவர்களுக்கு பயிற்சி வழங்கினேன். உண்மையில் நிறைகாக இருந்தது.
TODO
TODO
TODO
TODO
TODO
TODO
TODO

Sign in to commentNobody has commented yet... Share your thoughts with the author and start the discussion!

More Posts from Pandiarajan tnsf